Automotive Testing Expo India 2018

உங்கள் இலவச
கண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு


10, 11, 12 ஜனவரி 2018
சென்னை வர்த்தக மையம், சென்னை, இந்தியா


திறந்தவெளி தொழில்நுட்ப மன்றம்

Day 1: Wednesday 10 January

நாள் 1

10:30

டெஸ்ட் பெஞ்சுகளில் டிரான்ஸ்மிஷனை சரிபார்த்தல்

K விஸ்வநாதன்
ுணைத் தலைவர்
டைனஸ்பேட் இன்டெகிரேடெட் சிஸ்டம்ஸ்
இந்தியா

11:30

உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், வளர்ச்சியைத் தூண்டவும் மேம்பட்ட பரிசோதனைத் தீர்வு

ஷஷாங்க் சிங்
ிஸ்டம் ஒருங்கிணைப்பு பொறியாளர் (SIE)
MTS சிஸ்டம்ஸ் கார்ப்பரேஷன்
யு.எஸ்.ஏ.
போட்டிகள் அதிகரித்துவரும் உலகளாவிய வாகனச் சந்தையில் வளர்ச்சியடைய, சோதனைப் பொறியாளர்களுக்கு உற்பத்தித் திறனை மேம்படுத்தக்கூடிய, வளர்ச்சி நிகழ்முறைகளைத் தூண்டக்கூடிய முறைகளும் தொழில்நுட்பங்களும் தேவைப்படுகின்றன. இத்தகைய தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மற்றும் ஒப்புருவாக்க பிரிவுகளுடன் சேர்த்து கூடுதலாகப் பல விஷயங்களை இந்தக் காட்சியளிப்பு ஆராய உள்ளது. பரிசோதனை அமைப்பின் ஆற்றல், உற்பத்தித் திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்களையும் முறைகளையும் முன்னிலைப்படுத்தும் நிலைப்புத்திற பரிசோதனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை முதல் பகுதி எடுத்துரைக்கும். இரண்டாவது பகுதி அதிகரித்துவரும் பரிசோதனை மற்றும் ஒப்புருவாக்க கருத்தியலில் கவனம் செலுத்தும். இந்தக் கருத்தியல் வாகன மேம்பாட்டு சுழற்சியை மேம்படுத்த, அதிக நம்பகத்தன்மைமிக்க விளைவுகளை ஏற்படுத்த, ஆழ்ந்த நுண்ணறிவு மற்றும் வேகமான வளர்ச்சியை அளிக்க இயல் பரிசோதனை, மெய்நிகர் மாதிரிகள் மற்றும் மனித உள்ளீடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும்.

12:15 - 13:45

இடைவேளை

13:45

பழுதில்லா வாகன உற்பத்திக்கு ஒருங்கிணைந்த பரிசோதனை, தரம் மற்றும் இயக்கத் தரவு

ஃப்ரான்சிஸ்கோ ரிவேரா
லகளாவிய வணிக வளர்ச்சித் துணைத் தலைவர் (VP)
ATS அப்ளைட் டெக் சிஸ்டம்ஸ் LLC
யு.எஸ்.ஏ.
ஒரு உலகளாவிய கார் உற்பத்தியாளர், வகை அல்லது மூலாதாரம் எதுவாக இருந்தாலும் ATS குளோபல் உருவாக்கியிருக்கும் வாகனத் தரம் குறித்த தரவு அனைத்தையும் துல்லியமாகப் பெறுவதற்கு அணுகுகிறார். அனைத்து ஒருங்கிணைந்த தரவையும் ஒரே இடத்தில் பகுப்பாய்வு செய்வதற்கு அனுமதிக்கும் நடவடிக்கை எடுக்கத்தக்க அறிக்கைகளை வாடிக்கையாளர் பெற விரும்புகிறார்.

14:45

உறுதிசெய்யப்பட உள்ளது

National Instruments
USA

15:45

ISO 26262 மூலம் செயல்பாட்டு பரிசோதனை

மைக்கேல் மெக்கோர்மேக்
ேம்பாட்டு இயக்குநர்
டான்லா இன்க்
யு.எஸ்.ஏ.
ஓட்டுநர்களின் கைகளிலிருந்து வாகன மின்னணுவியல் பல பொறுப்புகளைத் தட்டிப்பறித்துள்ளது. முற்றிலும் தானாக இயக்குவதற்கு பாதுகாப்பு மற்றும் வசதி சிறப்பம்சங்கள் அதிவேக பங்களிப்பை அளித்து வருகின்றன. பிழை இல்லா, பாதுகாப்பான அமைப்புகளை உருவாக்குவதற்கு கார் தயாரிப்பாளர்களுக்கு உள்ள பொறுப்பு மிகவும் அவசியமானதாக மாறிவரும் சூழலில், பாதுகாப்பான மின்னணு அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது. ISO 26262, சிறந்த நடைமுறைகளை வரையறுப்பதன் மூலம் இந்த அமைப்புகளின் தரத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. தயாராகக் கிடைக்கக்கூடிய வளர்ச்சி கருவி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விரிவான பரிசோதனை, தேவைகளைத் தேடி கண்டுபிடிக்கும் திறன் மற்றும் குறியீடு கவரேஜ் ஆகிய தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என்பதை டான்லா காட்டும்.

Day 2: Thursday 11 January

நாள் 2

10:30

கிளவுட் அனலிட்டிக்ஸ் மேடைகளைப் பயன்படுத்தி எப்படி அளவீட்டு அமைப்பு பகுப்பாய்வு லாபகரமானதாக மாற முடியும்

சுவீர் சதானந்த்
யக்குநர் மற்றும் சி.இ.ஓ.
சுஷ்மா இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்
இந்தியா
நிகழ்நேரத்திலும் வேறு சூழ்நிலைகளிலும் தொடர்ச்சியான அளவீட்டு பகுப்பாய்வின் மூலம் பொருளின் தரம், நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகிய குறிக்கோள்களை நாம் நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்கு அளவீடுகள் நமது முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். உத்திரவாதமின்மை சிக்கல்கள் இல்லாமல், முழுமையான வாடிக்கையாளர் திருப்தியுடன் புறக்கணிப்புகளைத் தவிர்ப்பதன் மூலம் லாபத்திறனை உறுதிசெய்ய இந்த முடிவுகள் உதவுகின்றன. இந்த ஷோகேஸ் கிளவுட் அனாலிட்டிக்ஸ் மேடைகளைப் பயன்படுத்தி, தரவு ஈட்டல் அமைப்புகள் மூலம் சென்சார்களிலிருந்து தரவை பயன்படுத்துவதை நிகழ்நேரத்தில் அல்லது வேறு சூழ்நிலையில் எப்படி பகுப்பாய்வு செய்யலாம் என்பதற்கான நேரடி உதாரணத்தைக் கொண்டிருக்கும்.

11:30

ATM – பொருளமைப்பியல் ஆய்வுக்கூடத்திற்கான இயந்திரங்களும் உபகரணமும்

Dr அனில் கோபாலா
ெயற்திட்ட பொது மேலாளர் (GM) மற்றும் ஆய்வுக்கூட பொறுப்பாளர்
வெர்டர் சைன்டிஃபிக் பிரைவேட் லிமிடெட்
இந்தியா
ATM என்பது உலகிலேயே தரக் கட்டுப்பாட்டு நிகழ்முறைகளில் பயன்படுத்தப்படும் பொருளமைப்பியல் இயந்திரங்களின் முன்னணி உற்பத்தியாளராகும். உலோகவமைப்பியல் என்பது ஒளியியல் அல்லது எலெக்ட்ரான் நுண்நோக்கியியலைப் பயன்படுத்தி உலோகங்களின் இயல் அமைப்பை அறிந்து கொள்வதாகும். உலோக அமைப்பியல் உத்திகளைப் பயன்படுத்தி செராமிக் மற்றும் பாலிமர் பொருட்களும் தயார் செய்யப்படலாம். எனவே செராமோ அமைப்பியல், பிளாஸ்டோ அமைப்பியல் என்பதைச் சேர்த்து பொருளமைப்பியல் என்று அழைக்கப்படுகிறது. பொருளமைப்பியல் என்பது பொருட்களின் பாகங்களின் நுண் அமைப்பைப் பெறவும் ஆய்வு செய்யவும், அவற்றின் வடிவியல்களை அளவிடவும் பயன்படுத்தப்படுகிறது. உலோகவமைப்பியல் ஆயத்தம் என்பது பெரும்பாலும் சிதைவு நடவடிக்கைகளின் வரிசையாகும். இது மாதிரியை கையகப்படுத்த வழிவகுக்கும். இந்த மாதிரி பொருளின் நிஜமானத் தன்மைகளைக் குறிப்பதாகவும், எந்தவித வெப்பம்சார்ந்த அல்லது இயந்திரம்சார்ந்த உருக்குலைவு இல்லாததாகவும் இருக்க வேண்டும். உருக்குலைவு இல்லா ஈரமான உராய்வு வெட்டு, குளிர் ஏற்றுதல் அல்லது சூடேற்றுதல், அரைத்தல், மடிப்பிடல் மற்றும் மெருகேற்றல், அரிப்பொறித்தல் (இரசாயனம் சார்ந்தது, ஒளிச்சார்ந்தது), மின்பகு மெருகேற்றல் மற்றும் அரிப்பொறுத்தல் மற்றும் ஒளிச்சார்ந்த பகுப்பாய்வு-நுண்-கடினத்தன்மைப் பரிசோதனை ஆகியவைத் தேவையான முக்கிய வழிமுறைகளாகும். இந்தக் காட்சியளிப்பு, பொருளமைப்பியல் ஆய்வுக்கூடத்திற்கான ATM இயந்திரங்களையும் உபகரணத்தையும் விரிவாக உள்ளடக்கியிருக்கும்.

12:15 - 13:45

இடைவேளை

13:45

அயர்வு சேதம்: ஒருங்கிணைத்தல், ஒப்பிடல் மற்றும் அளவிடல்

டேன் பிசான்
ர்வதேச விற்பனை மேலாளர்
வைப்ரேஷன் ரிசர்ச் கார்ப்பொரேஷன்
யு.எஸ்.ஏ.
அயர்வு சேதம் என்பது வழங்கல் சங்கிலியில் பொதுவான, முன்பே அறிந்து கொள்ளக்கூடிய சேதம் ஏற்படுவதற்கு காரணமாகும். அயர்வு சேத அலைக்கற்றை (FDS) என்பது பல வழிகளில் பொறியாளர்கள் முடிவுகளை எடுக்க உதவும் ஒரு நுண்மமாக்கல் ஆகும். முதலாவதாக, ஒருங்கிணைந்த நேர களத் தரவின் அடிப்படையில் தோராயமான அதிர்வு பரிசோதனையை வடிவமைக்கவும், குறுக்கவும் FDS பயன்படுத்தப்படலாம். இரண்டாவதாக, அயர்வின் அடிப்படையில் நேர-கள அலைவடிவங்களை ஒப்பிட FDS பயன்படுத்தப்படலாம். மூன்றாவதாக, ஷேக்கரில் இயங்கும் அதிர்வு விவரங்களுடன் இறுதி-பயனர் சூழலை அளவிட இயல்வது களத்திலிருந்து ஆய்வுக்கூடத்திற்குச் செல்லும்போது நம்பிக்கையை அளிக்கும். சூழல்களை ஒருங்கிணைக்கும், ஒப்பிடும் மற்றும் அளவிடும் திறன் மற்றும் பரிசோதனை ஆகியவை FDSஐ பரிசோதனை வடிவமைப்பிற்கும் மற்றும் பொருள் பகுப்பாய்விற்குமான சக்திவாய்ந்த கருவியாக உருவாக்கும்.

14:45

அடுத்தத் தலைமுறைக்கான உள்-வாகன நெட்வொர்க்குகளைப் பரிசோதிப்பதற்கானப் புதிய பரிசோதனை முறைகள்

மேத்யாஸ் மோன்டேக்
யக்குநர், உத்திப்பூர்வ வாகன மார்க்கெட்டிங்
ஸ்பைரென்ட் கம்யூனிகேஷன்ஸ்
ஜெர்மனி
வாகனங்களில் வாகன ஈத்தர்வலை ஒருங்கிணைக்கப்படுவதால் பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு பொறியாளர்கள் பரிசோதனையில் புதிய சவால்களைச் சந்திக்கின்றனர். கடந்த காலத்தில் CAN, LIN, FlexRay அல்லது MOST போன்ற பாரம்பரிய பேருந்து தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட உள்-வாகன நெட்வொர்க்குகள் முக்கியமாக செயல்பாட்டு பயன்பாடு மட்டத்திலும், இயல் அடுக்கு ஒத்திசைவிலும் கண்டிப்பாகப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ரெஸ்ட்பஸ் ஒப்புருவாக்கம் மற்றும் விவரப் பதிவு ஆகியவை இப்போதும் அந்தப் பொறியாளர்களின் தினசரி வேலையாக இருந்துவருகிறது. இப்போது, ஈத்தர்வலையால் நாங்கள் புதிய அடுக்கு செயல்பாட்டைச் சேர்த்திருக்கிறோம்: கருத்துப்பரிமாற்ற அடுக்குச் செயல்பாடு. பல தொடர்பு நெறிமுறைகளையும் செயல்பாடுகளையும் கொண்ட ஒரு சிக்கலான பகிர்வு நெட்வொர்க்கைக் கொண்டிருப்பதால், ஒரு புதிய பரிசோதனை அடுக்கு தேவைப்படுகிறது. நெறிமுறை ஒத்திசைவு, நெட்வொர்க் கருத்துப்பரிமாற்றச் செயல்திறன் மற்றும் நெட்வொர்க் செயல்பாட்டு சோதனை ஆகியவை பாரம்பரிய சோதனைகளுக்கு மாற்றாக இருப்பதில்லை. எனவே, இந்தப் பரிசோதனை முறைகளை எப்படி ஒருங்கிணைப்பது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது எப்படி செயல்படுகிறது, இதனை எப்படி ஏற்கனவே உள்ள பரிசோதனை நிகழ்முறைகளில் ஒருங்கிணைக்கலாம் என்பது இந்தக் காட்சியளிப்பின் தலைப்பாக இருக்கும்.

15:45

CANbus சூழலில் நம்பகமான மற்றும் வசதியான மின் இயக்கத் திறன் அளவீடுகள்

இம்ரான் ஹுசைன்
ெஸ் ஸிம்மரில் விற்பனை ஆலோசகர்
TMI இனோவேட்டிவ் டெக்னாலஜீஸ்
இந்தியா
இந்தக் காட்சியளிப்பு இவை குறித்து கலந்துரையாடும்: மின் இயக்க அமைப்பு அளவீடுகளை எது சிறப்பானதாக மாற்றுகிறது; குறுகிய பேண்ட் / அகலமான பேண்ட் இரண்டக நிலை; இது நாம் நினைக்கும் அளவிற்கு DC-யைப் போல் இருக்காது; துல்லியத்தன்மையின் தாக்கம்; பொதுவான (-மோடு) சிக்கல்கள்; வாகனச் சூழல் பரிசீலனைகள் – CANbus வசதியைக் கொண்ட ஆற்றல் பகுப்பாய்விகள்; எந்த ரெசல்யூஷன் அவசியமானது மற்றும் பயனளிக்கக்கூடியது.

16:10

வாகனத் துறையில் அளவிடுவதற்கும் பரிசோதனை செய்வதற்குமான புதிய உத்திகள்

கணபதி ஹெக்டே
ிர்வாக இயக்குநர்
டெக்னோகாம் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
இந்தியா
இந்தக் காட்சியளிப்பு தானாகப் பிரச்சனைகளைக் கண்டறியும் அளவுருக்கள் குறித்து கலந்துரையாடும் – பரிசோதித்தல் மற்றும் குறிப்புதவி தரநிலைகளை உருவாக்குதல், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் பழுது ஏற்பட்டால் கண்டுபிடித்தல்; ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பேட்டரி பரிசோதனை.

Day 3: Friday 12 January

நாள் 3

10:30

உற்பத்தித் துறைக்கான IOT செயலிகள்

நிக்கில் பட் இனான்ஜெய்
ணிக நடவடிக்கைகள் மேலாளர்
அக்ரிவியா ஆட்டோமேஷன் பிரைவேட் லிமிடெட்
இந்தியா
அன்றாடம் கைகளால் அறிக்கையைத் தயார் செய்வது என்பது ஒருவருக்கு சலிப்பூட்டும் வேலையாக இருக்கும். தற்போதைய போட்டிகரமானச் சூழலில், ஒரு நிறுவனத்திற்குள் அறிக்கைகளின் வடிவம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். அனைத்து முக்கிய செயல்திறன் அளவுருக்களும் எங்கள் சாதனங்களைப் பயன்படுத்தி ஒரு மைய சேவையகத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம். மேலும், உலகெங்கிலும் இருந்து எங்கிருந்தும் அறிக்கைகளைப் பார்க்கலாம். நிகழ்முறைகளை வெளிப்படையாக்கக்கூடிய, நெருக்கடியான நிலைகளைத் திறமிக்கமுறையில் தீர்க்கக்கூடிய பல IOT செயலிகள் உள்ளன. இந்தச் செயலிகளில் சிலவற்றைக் குறித்து இங்கு விவரிக்கப்படும் மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்.

11:30

வாகனச் செயல்பாட்டு பாதுகாப்பு மற்றும் பாதுகாவலுக்கான வளர்ந்துவரும் தரநிலைகள்

ஷின்டோ ஜோசப்
ென்கிழக்கு ஆசிய நடவடிக்கைகள் இயக்குநர்
LDRA இந்தியா
இந்தியா
நவீன, இணைக்கப்பட்ட உலகத்தில், பாதுகாப்பும் பாதுகாவலும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் அவற்றை பிரிக்க முடியாத சூழலை நாம் அடைந்திருக்கிறோம். வாகனத் துறையில் பாதுகாவல் மீறல் எப்படி வாகனங்களில் கடுமையான பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கு ஏராளமான உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம். சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, முனைப்பான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான வடிவமைப்பு, மேம்பாடு, பரிசோதனை மற்றும் சான்றளிப்பு முறைமைகள் ஆகியவற்றை ஏற்றுநடப்பது, துறையில் சவால்களை எதிர்கொள்வதற்கு உதவும். ISO 26262 செயல்பாட்டு பாதுகாப்பு தரநிலை, வாகன OEMக்கள் வழங்கல் சங்கிலியின் தரத்தை நிர்வகிக்க உதவுகிறது மற்றும் வாகனத்தின் மின்னணு அல்லது மின்சார அமைப்புகளில் முறைப்படியான பழுது ஏற்பட்டால் செயல்பாட்டு பாதுகாப்பை உறுதிசெய்கிறது. இந்தத் துறையில் ஐரோப்பா முதலிடத்தைப் பிடித்து, உலகளவில் ஏற்றுநடக்கத்தக்க தரநிலையாக மாறிவிட்டது. பாதுகாவல் சவால்களைச் சமாளிக்க, வாகனத் துறை ஏற்கனவே SAE J3061, MISRA C, CERT C போன்ற சில தரநிலைகளை ஏற்று நடக்க துவங்கிவிட்டது. வேறு பல தரநிலைகள் காலப்போக்கில் வளர்ச்சியடையும், அதே சமயம் தற்போதுள்ள தரநிலைகள் துறைசார்ந்த அனுபவம் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் அவற்றின் தற்போதைய விதிகளையும் வழிகாட்டுதல்களையும் மேம்படுத்தி அதிக பக்குவத்தைக் காட்ட துவங்கியுள்ளன. இந்தக் காட்சியளிப்பு ஏற்கனவே உள்ள தரநிலைகளிலும் செயல்திட்டங்களிலும், துறையில் இவை ஏற்படுத்தும் தாக்கங்களிலும் கவனம் செலுத்தும்.

12:30

வாகன டைமிங் பகுப்பாய்வு: ஜெர்மானிய OEMக்கள்/டயர் 1கள் இதனை எப்படி கையாளுகின்றன

பீட்டர் க்ளிவா
ி.இ.ஓ.
க்ளிவா GmbH எம்பெடட் சிஸ்டம்ஸ்
ஜெர்மனி
மென்பொருளின் டைமிங்கை உள்ளடக்காமல் வாகன ECU மென்பொருளை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல அல்லது இதற்கு மிகவும் செலவாகும். பல-உள்ளகம் ஏற்படுத்தியுள்ள சிக்கல் பரவலாகக் குறைத்து மதிப்பிடப்படுகிறது. ஜெர்மானிய டயர் 1கள் அவர்களின் மென்பொருளின் டைமிங்கை எப்படி பகுப்பாய்வு செய்கின்றன, மேம்படுத்துகின்றன, சரிபார்க்கின்றன மற்றும் கண்காணிக்கின்றன? ஜெர்மானிய OEMக்கள் அவற்றின் தேவை விவரங்களை எழுதும்போது, டைமிங் தலைப்பை எவ்வாறு தெரிவிக்கின்றன? இந்தப் உரையாடல் பொதுவாக, டைமிங் பகுப்பாய்வு உத்திகள் குறித்த அறிமுகத்தை அளித்து, கண்டுபிடித்தல் மற்றும் அளவீடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, டைமிங் தேவைகளை எப்படி கையாள்வது என்பதைக் கற்றுத் தரும். எதிர்காலத்தில் டைமிங் எப்படி பாதுகாக்கப்படும் என்கிற கண்ணோட்டத்துடன் இந்தக் காட்சியளிப்பு முடிவடையும்.
இந்த நிகழ்ச்சி மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்கலாம்

வரவிருக்கும் கண்காட்சி: Automotive Testing Expo India 2020, 21-23 ஜனவரி 2020, ஹால் 2 & 3, சென்னை வர்த்தக மையம், இந்தியா (தற்காலிகமானது)