Automotive Testing Expo India 2020

உங்கள் இலவச
கண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு


22, 23, 24 ஜனவரி 2020
அரங்குகள் 2 மற்றும் 3இல், சென்னை வர்த்தக மையம், சென்னை, இந்தியா


ATS 2018 காட்சியளிப்பு நிகழ்ச்சி

ATE சென்னையில் நடைபெறவுள்ள ATS விவாத அரங்கில் ஐரோப்பாவைச் சேர்ந்த முக்கிய பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் முதல் நாளன்று இயக்கியற்ற பாதுகாப்பிற்கான பரிசோதனை அமைப்புகள் மற்றும் EVஐ பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அளவீடுகள், 2ஆம் நாளன்று ADAS, 3ஆம் நாளன்று பொறியியல் சேவைகள் என பல்வேறு முக்கிய தலைப்புகளில் பேச உள்ளனர்.

இந்தப் பேச்சாளர்கள் அவரவர்களின் துறைகளில் பல ஆண்டுகால அனுபவமிக்கவர்கள். இவர்கள் முன்னணி OEMக்களுடனும், உலகம் முழுவதிலும் செயல்பட்டுவரும் பாகங்கள் உற்பத்தியாளர்களுடனும் இணைந்து பணியாற்றி, அவர்களின் வாடிக்கையாளர்களின் புதிய பரிசோதனைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளை அளித்து ஆதரவளித்துள்ளனர். இதில் அளவீட்டு முறைகள் மற்றும் உத்திகள் குறித்து சிறப்பான முறையில் கலந்துரையாடி, விவரிக்கப்படும்.

நிகழ்ச்சி அட்டவணை

நாள் 1 (ஜனவரி 10, 2018): இயக்கியற்ற பாதுகாப்பு தினம்

11:00 -11:30

டேனியல் ஃபோயெர்டெர், imc
தலைப்பு: எலெக்ட்ரிக் வாகனங்களைப் பரிசோதித்தல் மற்றும் அளவிடல்

11:35 -12:05

தாமஸ் வெப்பர், ஹைஸ்பீட் விஷன்
தலைப்பு: மேக்ரோ விஸ் HS சீரீஸ் ஹை-ஸ்பீட் கேமரா. இந்தக் கேமரா 1 மெகாபிக்ஸல் ரெசல்யூஷனில் 4,000 fpsஐ அளிக்கிறது. எனவே இது வாகன உட்பகுதிகள், கிராஷ்-பரிசோதனை ஸ்லெட்கள், காற்றுப்பை பரிசோதனை தொழிற்சாலைகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைகளுக்கு மிகவும் ஏற்றது.

12:10 -12:40

கொலின் வில்லியம், மைக்ரோசிஸ்
தலைப்பு: காற்றுப்பை பரிசோதனை அமைப்பு மற்றும் இயக்கமற்ற பாதுகாப்பு. மைக்ரோசிஸ் வழங்கும் இந்தப் புதிய ஷ்யூர்ஃபயர் G6, காற்றுப்பை பரிசோதனையில் நம்பிக்கையையும் திறனையும் அளிக்கிறது.

14:10 -14:40

தாமஸ் வெப்பர், ஹைஸ்பீட் விஷன்
தலைப்பு: மிகச் சிறிய LED ஒளியமைப்பு. இடம் குறைவாக இருந்து, அதிகபட்ச ஒளி ஆற்றல் தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்காக நேனோ ஹை-பவர் LED ஹெட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

14:45 -15:15

டாக்டர் விட்டோரியோ கேப்பெல்லோ, மைக்ரோசிஸ்/கான்செப்டஸ்
தலைப்பு: பாதுகாப்பிற்கான கட்டுப்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுதலும் விஞ்சுதலும் மற்றும் பாகங்களைப் பரிசோதித்தல்.

15:00 -15:30

ராமி பாலோட், ஹெட் அகோஸ்டிக்ஸ்
தலைப்பு: இன் கார் கம்யூனிகேஷன்ஸ்
பொதுவான சூழ்நிலைகளின் கீழ் பின்னணியில் சத்தம் இருக்கும்போது இன்-கார் கம்யூனிகேஷன் (ICC) அமைப்புகள் பரிசோதனை.

நாள் 2 (ஜனவரி 11, 2018): ADASஐ புரிந்துகொள்ளுதல்

11:00 -12:00

பெஞ்சமின் ரெயிஸ் IPG
தலைப்பு: மேம்படுத்துதல் முதல் சரிபார்த்தல் வரை, ADASஐ புரிந்துகொள்ளுதல்

12:05 -12:45

டேனி பாய்லே, OXTS
தலைப்பு: RT வரம்பைப் பயன்படுத்தி ADAS பரிசோதனைக்கு உதவும் ஹன்டர் பாலிகான் பார்க் – சவால்களும் பயன்பாடுகளும்

14:10 -14:40

க்ளாவ்ஸ் வைமெர்ட், AB டைனமிக்ஸ்
தலைப்பு: சாஃப்ட் கார் 360 – யூரோ NCAP குளோபல் வெஹிக்கல் டார்கெட்டின் கூட்டுமுயற்சியில் உருவான சாஃப்ட் டார்கெட்வாகன

15:00 -15:30

ஸ்டீவ் பாய்லே, மோஷன் டேட்டா
தலைப்பு: இரவுச் சூழல் ஒப்புருவாக்க வழி (NEST)

நாள் 3: (ஜனவரி 12, 2018) NVH

11:00 -11:30

அண்ட்ரே பிர்னே, ஹெட் அகோஸ்டிக்ஸ்
தலைப்பு: வாகனப் பயன்பாடுகளுக்காக நடைமுறையில் கற்றை உருவாக்கத்தைப் பயன்படுத்துதல்

11:35 -12:05

டாக்டர் மார்ட்டின் ஹில், ரேஸ் டெக்னாலஜீஸ்
தலைப்பு: இணைத்தட சத்தத்தை அளவிட பயன்படுத்துவதற்கு எளிதான ஒரு முறை

12:15 -13:00

P.N. பிரசாத், AARTC
தலைப்பு: திறன் பொறித்தொடர் பரிசோதனை, வாகன இயக்காற்றல், RLDA, NVH மற்றும் ஒப்புருவாக்கம் ஆகியவற்றுக்காக நிறுவப்பட்ட, பிரத்யேக வசதிகளைக் கொண்ட வாகனத் தொழில்துறைக்கானப் பரிசோதனை மற்றும் பொறியியல் தீர்வுகள்.

சரியான நேரத்திற்கும், அதிக துல்லியத்துடனும் செயற்திட்டங்களை வழங்குவதில் AARTC நற்சான்றுகளைப் பெற்றுள்ளது.