கடந்த நிகழ்ச்சியைப் பற்றி மக்கள் என்ன சொன்னார்கள்?

“சர்வதேச அளவில், பல ஆண்டுகளாக துல்லியமான தொழில்நுட்பங்கள் வாகனப் பரிசோதனைக் கண்காட்சிக்கு ஆதரவளித்துள்ளன, மற்றும் நாங்கள் ஏன் அதைத் தொடர்ந்து மேற்கொள்கிறோம் என்பதற்கு இந்தியாவில் நடைபெறும் கண்காட்சி மற்றுமொரு முன்மாதிரியான காரணமாக விளங்குகிறது. உயர் தரமான பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கக் கூடியதாக, நன்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சியின் மூன்று நாட்களும் எங்களுடைய காட்சியிடம் மிகவும் மும்முரமாக இருந்தது”

உமேஷ் பட்டேல்
சிஇஓ (யு.கே. மற்றும் இந்தியா)
அக்யுரேட் டெக்னாலஜிஸ்


“வாகனப் பரிசோதனைக் கண்காட்சி இந்தியா 2018 எப்பொழுதும் போல மிகுந்த தொழில்முறை ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மற்றும் அது ஏடிஎஸ் மற்றும் எங்களது கூட்டாளர் நிறுவனங்களுக்கு ஒரு சிறப்பான கண்காட்சியாக அமைந்தது. எங்களுக்கு பல புதிய வழிகாட்டுதல்கள் கிடைத்தன மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுடன் சேர்த்து பல புதிய வாடிக்கையாளர்களும் எங்களுடைய காட்சியிடத்தைப் பார்வையிட்டுள்ளனர். 2015-2016 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு எங்களுடைய வணிகத்தை குறைந்தபட்சம் 20% அதிகரிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்.”

எஸ். ராமநாதன்
நிர்வாக இயக்குநர்
ஆட்டோமோட்டிவ் டெஸ்ட் சிஸ்டம்ஸ்

“இது மிகவும் நன்றாக திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட ஒரு கண்காட்சியாக அமைந்தது. எங்களது தீர்வுகளுக்கு மிகவும் தொடர்புடைய பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை நாங்கள் தொடர்புகொள்ள முடிந்தது.”

விபவ் கேத்ரி
தொழில்நுட்பச் சந்தைப்படுத்தல் பொறியாளர்
நேஷனல் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்


“எப்போதும் போல, வாகனப் பரிசோதனைக் கண்காட்சி இந்தியா 2016 எங்களுக்கு வியக்கத்தக்க வெற்றியளிப்பதாக அமைந்தது. எங்களது தயாரிப்பைப் பற்றி பலர் விசாரித்துச் சென்றுள்ளனர், மற்றும் இது வாகனப் பரிசோதனைத் தொழில்துறையில் “யார் யார்” ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற வலையமைப்பை உருவாக்குவதற்கான தனித்துவமிக்க வாய்ப்பை எங்களுக்கு வழங்கியது. உலகிலேயே குறிப்பாக வாகனப் பரிசோதனைத் தொழில்நுட்பங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் ஒரே ஒரு கண்காட்சியாக இந்த வாகனப் பரிசோதனைக் கண்காட்சி விளங்குகிறது என சிஎம் என்விரோசிஸ்டம்ஸ் கருதுகிறது. முதலீட்டின் மீதான வருவாய் எங்களை மிகவும் பூரிப்படையச் செய்துள்ளது, கொரியா மற்றும் வட அமெரிக்காவில் நடைபெறும் வாகனப் பரிசோதனைக் கண்காட்சியிலும் இப்பொழுது நாங்கள் பங்கேற்கிறோம்!”

விஷ்ணு யு
சந்தைப்படுத்தல் மேலாளர்
சிஎம்இ (சிஎம் என்விரோசிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்)


“இந்தக் கண்காட்சி எங்கள் நிறுவனத்துக்கு ஒரு புதிய வெளிக்கொணர்தலை வழங்கியுள்ளது. வணிகத் தொடர்பின் அளவு மற்றும் எங்களது காட்சியிடத்தைப் பார்வையிட்டவர்கள் காண்பித்த தொழில்நுட்ப ஆர்வம் ஆகியவை மிகவும் ஊக்கமளிப்பதாக அமைந்தன.”

லாரா சி. லார்சன்
பொறியாளர்
மிச்சிகன் சயின்டிஃபிக் கார்ப்.


”வாகனத் தொழில்நுட்பம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் எனக்கு உள்ள ஆர்வத்தின் காரணமாக, டெட்ராய்டு மற்றும் ஸ்டட்கார்டில் நடந்த வாகனப் பரிசோதனைக் கண்காட்சியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நான் தொடர்ந்து கலந்துகொண்டிருக்கிறேன். வாகனப் பரிசோதனைக் கண்காட்சி இந்தியா 2016 நிகழ்வின்போது, எங்களது அனுபவம் முதலாவது நாளிலிருந்தே அபரிமிதமானதாக இருந்தது மற்றும் அது கண்காட்சியின் மூன்று நாட்களிலும் எங்களை சுறுசுறுப்பாக இயங்கச் செய்தது. எண்ணற்ற சிறப்பான விசாரணைகளை நாங்கள் எதிர்கொண்டோம். அதோடு, இனிவரும் ஆண்டுகளில் சிறப்பான புதிய வியாபாரத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்”.

எஸ். குமார் தல்வார்
CEO மற்றும் தலைவர்
OEM டெக்னாலஜிக்கல் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்


”வாகனப் பரிசோதனைக் கண்காட்சி எப்பொழுதுமே அதன் தொடக்க நிலையிலிருந்தே UKIP மீடியா & ஈவண்ட்ஸ் நிறுவனத்தால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு கண்காட்சியிலும் பார்வையாளர்கள் அதிகரித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். பொருத்தமான பார்வையாளர்கள் கண்காட்சிக்கு வருகை புரிவதும் எங்களது காட்சியிடத்தைப் பார்வையிடுவதும் எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது, இது செயலாக்கப்படுகின்ற சிறப்பான தெளிவுப் பார்வைக்கும் விசாரணைகளுக்கும் வழிவகுக்கிறது. UKIP மீடியா & ஈவண்ட்ஸ் அணிக்கு எனது வாழ்த்துகள். இந்தச் சிறப்பான பணியை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்”!

ருஜுதா பிரகாஷ் ஜகதாப்
நிர்வாக இயக்குநர்
SAJ டெஸ்ட் ப்ளான்ட் பிரைவேட் லிமிடெட்


”சென்னையில் நடைபெற்ற வாகனப் பரிசோதனைக் கண்காட்சியில் காட்சியாளராக நான் மூன்றாவது முறையாகக் கலந்துகொள்கிறேன். அது எனக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. மீண்டும் 2018 நிகழ்விலும் நாங்கள் கலந்துகொள்வோம்”.

வி. இராமச்சந்திரன்
நிர்வாக இயக்குநர்
மேரி ஏரோடெக் பிரைவேட் லிமிடெட்

புகைப்பட கேலரி