ஹோட்டல் தகவல்


வரவிருக்கும் இந்திய வாகன சோதனை கண்காட்சிக்கான அதிகாரப்பூர்வ ஹோட்டலாக லீ ராயல் மெரிடியன் சென்னை ஹோட்டலை நியமிப்பதில் இந்திய வாகன சோதனை கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

முகவரி: சென்னை வர்த்தக மையம், போரூர் சாலை அருகில், சென்னை, 600089 இந்தியா தொலைபேசி: +91 44 2231 3555

இந்திய வாகனப் பரிசோதனைக் கண்காட்சி 2020 சென்னை வர்த்தக மையத்தில் அரங்குகள் 2 மற்றும் 3இல் நடைபெறும்.

பாதுகாப்பு அதிகாரிகள் தலத்தில் இருப்பார்கள், மேலும் உங்களுடைய பாதுகாப்புக்காக ரேன்டமாக பைகள் சோதனை செய்யப்படும் என்பதை கவனத்தில் கொள்க.

விமானம் மூலமாக

சென்னை சர்வதேச விமான நிலையத்தை ஒட்டி தென்பகுதியில் சென்னை வர்த்தக மையம் அமைந்துள்ளது, எல்லா முக்கிய விமான நிறுவனங்களின் சேவைகளும் கிடைக்கின்றன. கார் மூலம் வர்த்தக மையத்திலிருந்து 15 நிமிடத்தில் அல்லது பொதுப் போக்குவரத்தின் மூலம் 50 நிமிடங்களில் சென்றடைந்துவிடலாம் (திரிசூலம் இரயில் நிலையம் விமான நிலையத்துக்குள் அமைந்துள்ளது, அது நேரடியாக கிண்டிக்குச் செல்கின்றது. அதே சமயம், M54 பேருந்து வர்த்தக மையத்துக்கு வெளியில் அமைந்துள்ள நந்தம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு நேரடியாகச் செல்கின்றது.

இரயில் மூலமாக

அருகிலுள்ள இரயில் நிலையம் புனித தோமையார் மலை இரயில் நிலையம் ஆகும் (சென்னை புறநகர் இரயில்வே வலையமைப்பைச் சார்ந்தது) மற்றும் அருகிலுள்ள மெட்ரோ நிலையம் ஆலந்தூர் மெட்ரோ நிலையம் ஆகும் (M54 வழியில் நேரடியாக 20 நிமிட பேருந்து பயணம்). டாக்சியில் சென்றால் இரண்டு இடங்களுக்கும் 10 நிமிடங்களில் சென்றுவிடலாம்.

சாலை வழியாக

சென்னை வர்த்தக மையம் சென்னையிலுள்ள முக்கிய பெருவழிச் சாலையாகிய பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில் (SH-55) அமைந்துள்ளது. எனவே அனைத்து முக்கிய வழிகள் வாயிலாகவும் அங்கு எளிதாகச் செல்ல முடியும். சென்னை வர்த்தக மையத்துக்கு வாகனத்தில் சென்றால் 30 நிமிட நேரத்துக்குள் சென்றுவிடலாம்.

இடவசதி

ஹோட்டல் பற்றிய கூடுதலான தகவல்களை அறிந்துகொள்வதற்கு www.starwoodhotels.com ஐப் பார்வையிடுங்கள்.