Products on Show

நெகிழ்வான சுற்றுச்சூழல் பரிசோதனை சேம்பர்கள்
Envisys Technologies - Stall 4078

சுற்றுச்சூழல் நிலைகளை பரிசோதனை கூடத்தில் மீண்டும் உருவாக்குவதுதான் உதிரிபாகங்கள் உண்மை உலகினை அடைவதற்கு முன் பரிசோதிப்பதற்கான ஒரே வழியாகும், ஆனால் பல சுற்றுச்சூழல் சேம்பர் அமைப்புகள் அளவு என்று வரும்போது நெகிழ்வுத்தன்மை கொண்டிருப்பதில்லை. என்விஸிஸ் டெக்னாலோஜீசின் ET மற்றும் EM வரிசைகள் சுற்றுச்சூழல் பரிசோதனைகளுக்கு தனிப்பயன் அளவுகள் மற்றும் தனிப்பயன் அம்சங்கள் உட்பட நெகிழ்வான தெரிவுகள் மற்றும் மிக சமீபத்திய தொழில்நுட்பங்களை வழங்குகின்றன. ET வரிசைகள் -70oC/-40oC லிருந்து 180oC வரை மற்றும் 10% லிருந்து 95% RH வரையிலான வரம்பில் வெப்பநிலைக்கான தயாரிப்பு/உதிரிபாக நிலை சுற்றுச்சூழல் பரிசோதனை பயன்பாடுகளுக்கு பொருந்தும் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றது.. EM வரிசைகள் மின்னணு மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற சிறிய தயாரிப்புகளை பரிசோதிப்பதற்கு ஏற்றவை, ஏனெனில் இந்த சேம்பர்கள் பெஞ்ச் அல்லது மேசையின்மீது எளிதில் பதிப்பதற்கு அனுமதிக்கும் அடக்கமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. நிறுவனம் துரு தடுப்பு பரிசோதனைக்கான பல சால்ட் ஸ்பிரே சேம்பர்களையும் கொண்டுள்ளது, அவை பன்னாட்டு தரநிலைகளைக்கு ஏற்ப பல்வேறு பரிசோதனை பயன்பாடுகளைப் பூர்த்தி செய்ய அடிப்படை மற்றும் சைக்ளிக் பதிப்புகளில் கிடைக்கிறது.

ஸ்டால் 4078

செய்திக்குத் திரும்புக