Automotive Testing Expo India 2018

உங்கள் இலவச
கண்காட்சிக்கான பாஸ் இப்போது பதிவு


10, 11, 12 ஜனவரி 2018
சென்னை வர்த்தக மையம், சென்னை, இந்தியா


செய்திகள் காட்டு


புதுமையான வாகன வலைப்பின்னல் கருவிகள்
Intrepid Control Systems - Stall 2062

ValueCAN4 என்பது, வாகன வலைப்பின்னல் கருவித் தயாரிப்பில் நிபுணரான இன்ட்ரெபிட் கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் வழங்கும் சமீபத்திய CAN FD, இடைமுகம் மற்றும் தானியங்கி IoT தளத் தயாரிப்பு ஆகும். இந்தியத் தானியங்கிப் பரிசோதனைத் திருவிழா 2018ல் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்த அமைப்பு CAN FDக்கான ஒரு புரட்சிகரமான உயர்தரக் கருவித் தீர்வு ஆகும். ValueCAN4 ஆனது, PCயிலிருந்து முற்றிலும் தனித்து இயங்குகிறது, இதில் சான்று பெற்ற டிரைவர்கள் உள்ளன, இதன் CAN ட்ரான்ஸீவருக்குத் தனியே வெளி மின்சாரம் தேவையில்லை. குறைந்த விலை இடைமுகங்களிடையே இதுபோல் தனித்து இயங்கும் தயாரிப்புகள் தனித்துவமானவை, PCகள் மற்றும் அவற்றின் தகவல்தொடர்புகளைப் பாதிக்கக்கூடிய தரையாக்கம் அல்லது இரைச்சல் தொடர்பான பிரச்னைகள் இதில் இல்லை. ValueCAN4 ஆனது உயர் அலை அகல CAN FD வலைப்பின்னல்களில் இயங்குவதற்காகப் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இரண்டு சானல்களிலும் 10Mbitல் 100% பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் இந்தியாவில் அறிமுகமாகும் இன்னொரு தயாரிப்பு, இதே நிறுவனத்தின் neoOB2 pro என்கிற திறந்த தள, கம்பியில்லா OBD மாற்றி ஆகும். இதில் நிரலாக்கக்கூடிய Wi-Fi, ப்ளூடூத் BLE மற்றும் ப்ளூடூத் க்ளாஸிக் SPP தொகுப்புகள் உள்ளன, இந்தத் தொகுப்புகளுக்குள் உள்ள அனைத்து வாகன வலைப்பின்னல் தரவுகளையும், இன்ட்ரெபிடின் CAN, LIN மற்றும் ஈதர்நெட் டிரைவர்களுடன் இடைமுகம் நிகழ்த்தும் பாதுகாப்பான APIகள்மூலம் பயனாளர்கள் முழுமையாக அணுகலாம்.

ஸ்டால் 2062

செய்திக்குத் திரும்புக

வரவிருக்கும் கண்காட்சி: Automotive Testing Expo India 2020, 21-23 ஜனவரி 2020, ஹால் 2 & 3, சென்னை வர்த்தக மையம், இந்தியா (தற்காலிகமானது)